Wednesday 23 February 2011

அறிவியல் கண்காட்சி

                                                  அறிவியல் கண்காட்சி





பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் திறன்களை வெளிப்படுத்த கொடுக்கும் வாய்ப்பாக அறிவியல் கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு மாணவர்களின் படைப்புகள் பள்ளியளவில் தெரிவுசெய்யப்பட்டு, அப்படைப்பு மாவட்ட அளவில் எடுத்துச் செல்லப்பட்டது.  நம் பள்ளி மாணவர்களின் படைப்புகள் வட்ட அளவில் முதலிடம் பெற்றமைக்கான கேடயத்தை அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சகாயம் அவர்களிடமிருந்து நம் மாணவர்களும் ஆசிரியர்கள் திரு.சி.கோபாலகிருஷ்ணன், மற்றும் திரு.க.ராம் கணேஷ் அவர்கள் பெற்றுக் கொள்ளும் காட்சி 

பள்ளியின் மூலிகைப் பண்ணை

                                              மூலிகைப் பண்ணை

பள்ளியின் மூலிகைப் பண்ணையானது பள்ளித் தலைமையாசிரியர் திரு. பெ.அருணகிரிநாதன் அவர்களது இசைவின் பேரில், விவசாயத்துறையின் சார்பாக அதன் ஆசிரியர் திரு. க. ராம்கணேஷ் மற்றும் சக ஆசிரியர்களான திரு.ந.ராஜ்குமார், திரு.சி.கோபாலகிருஷ்ணன், திரு.நா,நடராசன் ஆகியோரது முயற்சியால் பள்ளி வளாகத்தில் துவங்கப்பெற்றது. தொட்டதெல்லாம் சிறப்பாக செயல்படுத்தும் பள்ளி ஆசிரியர்கள் இதனையும் செவ்வனே பயிரிட்டு மாநில அளவில் பேசப்படும் அளவுக்கு சிறந்த மூலிகைப்பண்ணையாக உருவாக்கிக் காட்டினர். அதனை அப்போதைய முதன்மைக்கல்வி அலுவலர் திரு.அப்பாதுரை அவர்கள் பார்வையிட்ட போது.



பள்ளியின் நூலகம்

                                                     பள்ளி நூலகம்



பள்ளியின் நூலகம் நாமக்கல் மாவட்ட அளவில் சிறந்த நூலகம் என பெயர் பெற்றுள்ளதாகவும், மிகச்சிறப்பாக செயல்படுகிறது என முதன்மைக் கல்வி அலுவலர் திரு அப்பாதுரை அவர்கள் பாராட்டி அதன் செயல்பாடுகள் குறித்து நூலகர் திரு. தா,சம்பத் அவர்களிடமும், மாணவ மாணவியர்களிடமும், ஆசிரிய ஆசிரியைகளிடமும் வினவும் காட்சிகள்,

Tuesday 22 February 2011

Add caption
                       தலைமையாசிரியர்

இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர் பெ.அருணகிரிநாதன், M.Com., M.Phil., M.Ed., அவர்கள் தாம் பயின்ற பள்ளியில் தலைமையாசிரியராக பணியேற்ற நாள் முதலாக பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகிறார். அதன் அறுவடைகளில் பல மாவட்ட, மாநில அளவில் பல சாதனைகளை புரிந்திட்ட மாணவர்கள்.  இவரது முயற்சி கல்வித்துறை இணைச் செயல்பாடுகளிலும் மாபெரும் வெற்றிகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஓவியம். விளையாட்டு, சுற்றுச்சூழல், மூலிகைப்பண்ணை, நூலகம், இன்னும் பல..

Sunday 20 February 2011

காவிரி ஆற்றின் வடகரையில் இயற்கை எழில் சூழ்ந்த மோகனூருக்கும் வேலூருக்கும் இடையில் அமைந்துள்ளது  பாலப்பட்டி கிராமம். இப்பகுதியில் வெற்றிலை, வாழை, நெல், கரும்பு போன்ற இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டமர்ந்த பாலப்பட்டிகிராமம், இங்குவாழ் ஏழை எளிய மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட பள்ளி இப்போது ஆல விருட்சமாக பரந்து விரிந்து காணப்படுகிறது.  இப்பள்ளியின் வரலாறு இனிவரும் நாட்களில் காணலாம்